2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நீர் வழங்கல், வடிகாலமைப்பு வசதிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை'

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில், இதுவரை காலமும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு வசதிகள் என்பன சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.    

கந்தளாய், பேராறு ஜனதா மாவத்தையை 21 இலட்சம் ரூபாய் செலவில் காபட் வீதியாக்குவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.                  

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கந்தளாய் பிரதேசம் மூவீன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற பகுதியாகும். அதிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில், மறைந்த முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.                 

கந்தளாய் பிரதேசத்தில் ஒழுங்கான வடிகான் வசதிகளை ஏற்படுத்துவதோடு, இப்பிரதேசத்தில் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். கந்தளாய் கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் அதிகமாக ஆசிரியப் பற்றாக்குறைகள் மற்றும் கட்டடப் பிரச்சினைகள், வளங்கள் இன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கூடிய விரைவில் ஒழுங்கமைக்க வேண்டும்.

இன்று அதிகமாக, பாடசாலைப் பிரச்சினைகளே ஏற்படுகின்றன. இது நிவர்த்திகப்பட வேண்டியதோடு, பொது மக்களின் ஒத்துழைப்புகளும் பெறப்பட்டு பாடசாலை நிர்வாகம் செயற்பட வேண்டும்.                       

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒவ்வொரு பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் பின்தங்கிய கிராமங்களின் வளர்ச்சிக்கும் அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதேச வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் இன்றி மக்கள் நன்மையடையும் வகையில் சேவைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக, கட்சி பேதம் பாராமல் நமது ஒத்துழைப்புகளை நல்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதன் மூலமாகவே எமது கிராமத்தின் வளர்ச்சி விரிவாக்கப்படும் என்றார்.    

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .