2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

66 பாடசாலை பாடசாலைகளுக்கு உதவி

Niroshini   / 2017 மார்ச் 18 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப்  பாடசாலைகளையும் சுத்தம் செய்து மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தினால் விசேட நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

டெங்குத்தாக்கம் கிண்ணியாவில் அதிகரித்திருந்ததனால் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 13 பேர் உயிர் நீத்தனர். இதன் காரணமாக எமது கல்வி வலயத்தின் பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வரவு வெகுவாக குறைவடைந்ததினால் பாடசாலையினை 3 தினங்களுக்கு மூட தீர்மாணித்தோம்.

இருந்தபோதிலும் மூடப்பட்ட இந்த மூன்று தினங்களுக்கும் பொருத்தமான சனிக்கிழமைகளில் பதில் பாடசாலையினை நடத்த நவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பாடசாலைகளினைச் சுத்தம் செய்து மாணவர்கள் மத்தியிலுள்ள பீதியினை அகற்றி திங்கள் முதல்  இப்பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக பாடசாலைகளைச் சுத்தம் செய்துகொள்வதற்காக மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 111 பாடசாலைகளுக்கு ரூபாய் 6,000உம் 1ஏ பாடசாலைகளுக்கு ரூபாய் 7,000உம் 1ஏபி பாடசாலைகளுக்கு ரூபாய் 8,000 உம் என்ற அடிப்படையில் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்நிதிகளை கொண்,டு பாடசாலையின் சுற்றுச் சூழலலைச் சுத்தம் செய்து திங்கட்கிழமை முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக நடாத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 66 பாடசாலைகளின் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X