2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'பெண்களின் அரசியலுக்கு கிராமங்களிலேயே அடித்தளம் வேண்டும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு கிராமங்களிலிருந்தே சரியான அடித்தளம் இடப்பட வேண்டும் என, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்குபற்றலை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபருக்குப் பதிலாக, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் அரசியல் பங்குபற்றலை வலுப்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைகள்  நடைபெற்றன.

பெண்களின் அரசியல் பங்குபற்றலுக்கு தேவையான நடைமுறை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் நற்பண்புகளையுடைய சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற பெண்களும் அரசியலில் பங்குபற்ற வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச சேவையில் இன்று பெண்களின் சதவீதம்  மிக உயர்வாக காணப்படுவதாகவும் இதே போன்று அரசியலிலும் குறிப்பிட்ட வீதம் பெண்களுக்கு கிடைக்க இப்படியான வலுவூட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறப்புக்குரியது என்றும் இதன்போது மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் இச்செயலமர்வினை அரசசார் திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .