Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
'இல்லங்களில் இருக்கிறோம் என்பதற்காக, பிள்ளைகள் நம்பிக்கை இழக்ககூடாது. உங்களைச்சுற்றிப் பல்வேறு திணைக்களங்கள் காணப்படுவதுடன், அதிகாரிகளாகிய நாங்கள் ஆதரவு வழங்கிவருகிறோம்' என, முதூர் பிரதேச சிறுவர் நன்டைத்தை பொறுப்பதிகாரி கெ.அருட்செல்வம் தெரிவித்தார்.
மூதூர் மல்லிகைத்தீவில் உள்ள அன்னை சாரதா மகளிர் இல்லம் மற்றும் மூதூர் நகரில் உள்ள அப்துல் ஆண்கள் இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சிறுவர் தினமான நேற்று, மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் இல்லத்தில் இருப்பதாக எண்ணி கவலை கொள்ள வேண்டாம். தன் நம்பிக்கையுடன் உதாரண புருஷர்களாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.
சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்துல்கலாம் போன்ற தலைவர்களும் இவ்வாறுதான கிராமங்களில் இருந்து சாதனையாளர்களாக வந்தவர்கள்தான்.
நீங்கள் இல்லங்களில் இருக்கின்றோம் என, கவலையடைய வேண்டியதில்லை உங்களுக்கு சேவை செய்ய சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் சிறுவர் மேம்பாட்டுதிணைக்களம், பொலிஸ் திணைக்களம்ஈ இல்ல நிர்வாகம் மற்றும் பொது நிறுவனங்களும் பக்கபலமாக உள்ளன.
நீங்கள் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறப் பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு இரு இல்ல மாணவர்களுக்குமான விளையாட்டு மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், சகல மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, மூதூர், சம்பூர் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர் பிரிவு அதிகாரிகள், சிறுவர் மேம்பாட்டு அதிகாரிகள், பாடசாலை நிர்வாகத்தினர், இளைஞர் அபிவிருத்தியக மதியுரைஞர் மற்றும் இல்ல முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
57 minute ago
3 hours ago