2025 மே 16, வெள்ளிக்கிழமை

16 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின்   திருகோணமலை வளாகத்தில் கடந்த செவ்வாய் மாலை 4 மணி முதல் சுமார் 6 மணித்தியாலங்களாக  விரிவுரையாளர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களையும் தடுத்து வைத்தார்கள் என்று இனங்காணப்பட்ட   16 மாணவர்களுக்கான வகுப்புத்தடை  மறு அறிவித்தல்வரை அப்பல்கலைக்கழக நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட  விசாரணையை  மேற்கொண்ட கிழக்கு  பல்கலைக்கழக நிர்வாகம் இத்தடையை அறிவித்துள்ளது.

விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் கடந்த புதன்கிழமை முதல் நிர்வாக உத்தியோகத்தர்களும்; விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வந்தனர்.  

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நேற்று வியாழக்கிழமையும்  திருகோணமலை வளாகத்துக்கு முன்பாக போராட்டத்தை  பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்தியிருந்தன.

மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளி இப்போராட்டம் தொடர்ந்த நிலையிலேயே மேற்படி மாணவர்களுக்கான வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து வெளியிட்ட வளாக முதல்வர் கே.கனகசிங்கம் 'தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 16 மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த தினம் நான் வளாகத்தில் இருக்கவில்லை. வந்தாறுமூலை  பல்கலைக்கழகத்துக்கு பணியின் நிமித்தம் சென்றிருந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில்; குறித்த பல விரியாளர்களையும் பணியாளர்களையும் அடைத்து வைத்ததுடன் என்னைச் சந்திக்க கோரியுள்ளனர். அன்றையதினம் முற்பகல் 10 மணிவரை திருகோணமலை  வளாகத்தில் இருந்து பின்னரே வந்தாறுமூலைப்  பல்கலைக்கழகத்துக்கு நான்  பணி நிமித்தம் சென்றிருந்தேன்.

இது பற்றிய முறைப்பாடுகளும்; உபவேந்தரின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.  அதற்கிணங்க நிர்வாகம் இவ்வகுப்புத்தடையை அறிவித்துள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .