Kogilavani / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பிரதேச சபையினால் தோப்பூர்- தேக்கஞ்சோலைப் பகுதியில் 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பொது விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்படவுள்ளது.
அதற்காக இனங்காணப்பட்ட இடத்தில் தோப்பூர் கடினபந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் சிரமதானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
சிரமதானத்தில், தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட 24 கடின பந்து அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டனர்.
யுத்தம் நிலவிய காலத்திலிருந்து இன்றுவரை தோப்பூர் பிரதேசத்தில் கடின பந்து கிரிககெட் இடம்பெற்று வருகின்றது.
கடின பந்து கிரிக்கெட் போட்டி இடம்பெறுவதற்கு பொறுத்தமற்ற இடத்திலேயே இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இது சம்மந்தமாக தோப்பூர் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே இம் மைதானத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டு புதிய மைதானம் அமைக்கப்படவுள்ளதாக தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிஸாம் தெரிவித்தார்.
இச் சிரமதானத்தில் 200 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026