2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மிதிபலகையிலிருந்து விழுந்து ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த  தனியார் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கதிரவெளி, பால்சேனைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசதுரை தேவராசா (வயது 30) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

வேகமாக வந்த பஸ் ஈச்சிலம்பற்றுச் சந்தியில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கிப் புறப்பட முற்பட்டபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் காயமடைந்த இவர்  அவசர விபத்துச் சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .