Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டத்துக்கு நீரைக் கொண்டு வரும் மகாவெலி ஆற்றுக்குக் குறுக்கேயுள்ள மினிப்பே அணையை 4 மீற்றர் வரை உயர்த்துவதால், மூதூர், சேருவில, வெருகல் பிரதேசங்களிலுள்ள 80,000 க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்படும் என, அல்லை பிரதேச 42 விவசாய சங்கங்களின் சம்மேளன தலைவர் அனுருத்த விஷ்வந்த தெரிவித்தார்.
இத்திட்டத்தால், 22,500 ஏக்கர் நெற்செய்கையும் பாதிக்கப்படும் எனவும் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மினிப்பே அணைக்கட்டு உயர்த்தும் திட்டம் பற்றியும் இதனால் திருகோணமலை மாவட்டத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் பற்றியும் விளக்கும் செய்தியாளர் சந்திப்பு, திருகோணமலை நகர சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (04)நடத்தப்பட்டது.
இதன்போது சம்மேளனத்தின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மகாவலி ஆறு முன்னரே மறிக்கப்பட்டு வடக்கு நோக்கி திருப்ப்பட்டது. இதன் காரணமாக நீர் வரத்து சற்று குறைவடைந்தள்ளது. தற்போது இந்நீரினை வடமத்திய மாகாணத்துக்;கு அனுப்புவதற்கு வசதியாக மினப்பே என்னும் இடத்தில் அணைக்கட்டினை மேலும் 4 மீற்றர் உயரத்துக்;கு உயர்த்த உள்ளனர்.
இவ்வாறு அணைக்கட்டு உயர்த்தப்பட்டால், மாவில் ஆறு பகுதிக்கு நீர் வரத்து குறைவடைந்து வெருகல் பிரதேசத்தில் ஆற்றுடன் கடல் நீர்கலக்கும் நிலை எற்படலாம். முன்னர் மகாவலி ஆற்று நீரினை நம்பி 4 போகம் நெற்செய்i மேற்கொள்ளப்ட்டது. இனி வரும் காலங்களில் ஒரு போகம் மட்டுமே செய்யும் நிலை தோன்றலாம்.
அணைக்கட்டில் கதவு போட்ப்பட்ட நீர் வரத்தில் தடை இல்லாது அமைக்கப்பட வேண்டும். ஆனால் 90,000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க்பபடும் இந்த அணைக்கட்டு திட்டத்தில் கதவு வைத்து நீர் வழங்கும் நிலை இல்லாது உள்ளது. இது எமக்கு பாதிப்பினை உண்டு பண்ணும்.
இதனை நாம் நிறுத்த சொல்லவில்லை. எமது பகுதிக்கான நீர் தடை இல்லாது தொடர்ச்சியாக கிடைக்கத்தக்கதாக திட்டத்தை முன்னெடுங்கள்.
அதிகாரிகள் எமக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். புராதன பூமியான எமத பிரதேசம் பாழடையும் நிலை ஏற்படுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். அரசுக்கு இத்திட்டம் பற்றி எதிர்பபை தெரிவிக் போராட்ஙடகளை நாம் முன்னெடுக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago