2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'முன்பள்ளி ஆசிரியர்களை மத்திய அரசாங்கம் உள்ளீர்க்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முன்பள்ளி ஆசிரியர்களை மத்திய அரசாங்கம் உள்ளீர்க்கவில்லை என்பதுடன், அவர்களைக் கல்வியின் ஓர் அலகாகவும் மத்திய அரசாங்கம் அங்கிகரிக்கவில்லை. ஆனாலும் மாகாண சபை இந்தப் பொறுப்பைச் சுமந்துள்ளது எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் மாகாண சபையில் மாகாண சபை நிதிப் பிரமாணங்களின் அடிப்படையில் இதற்கான ஒதுக்கீடுகளைச் செய்யக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் கூறினார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முன்பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுஇ பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது 'கல்விப் புலத்தில் அங்கிகரிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக  முன்பள்ளி உள்ளது. மற்றைய ஆசிரியர்களுக்கு வழங்கும் சலுகைகள் சம்பளம்; ஆகியவை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுக்கான சீரமைந்த பாடத்திட்டத்தை வகுக்க வேண்டியது கல்வி அமைச்சினுடைய பொறுப்பாகும்.
எமது முயற்சியின் பயனாகத் தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

முன்பள்ளிகளைப் பொறுத்தவரையில் முன்னர் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொறுப்பு எடுத்திருந்தன. அவ்வாறிருந்தபோதுஇ முன்பள்ளி ஆசிரியர்களின் தேவைகளை ஓரளவுக்குப்; பூர்த்தி செய்வதற்கு அளவான ஊதியம் கிடைத்தது. ஆனால்இ அரசசார்பற்ற நிறுவனங்கள் அப்பொறுப்பைக் கைவிட்டவுடன்இ அதைப் பாரம் எடுத்துச் செய்ய வேண்டிய பொறுப்பு தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்குக்குக் கிடைத்துள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X