Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
கடந்த அரசாங்கத்தில் மீனவர்கள் பிரச்சினைகள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு மீனவர்களுக்கான பல்வேறு நலன் பேணும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் தெரிவித்தார்.
தோப்பூர் பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு சல்மா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூவின மீனவர்களுக்கும் என்னென்ன நன்மை பயக்கும் ஏற்பாடுகள் உள்ளனவோ, அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வேன். நான் மக்களின் பிரச்சினைகளையே பார்ப்பவன்' எனத் தெரிவித்தார்.
36 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
52 minute ago