2026 மார்ச் 23, திங்கட்கிழமை

250 மில்லிகிராம் கஞ்சாவுடன் நபர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப்.முபாரக்

திருகோணமலை, சீனக்குடா பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, சுமேதகமப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரையே கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .