2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன'

Thipaan   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பாறு கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும்

மேற்கொள்ளப்பட்டுவருவதாக, பிரதேச செயலாளர்  எம்.அனஸ், இன்று திங்கட்கிழமை(06) தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள், தமது காணிகளை பெற்றுக் கொள்வதற்கு தமது கோரிக்கைகளை காணி மறுசீரமைப்பு  ஆணைக்குழுவுக்கு அனுப்ப முடியுமெனவும் இதற்கான அறிவித்தல்கள் கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மீள்குடியேற்ற நடவடிக்கை, கடந்த 20.05.2016 அன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, முதற்கட்டமாக 58 குடும்பங்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஆயினும், மேலும் 350 குடும்பங்கள் வரை இங்கு வசித்த நிலையில் அவர்களது தகவல்களைத் திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதற்காக சிரேஷ்ட கிராம அதிகாரி ஒருவரின் தலமையில் ஒரு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  உப்பாற்றில் வசித்து கடந்த 1990.06.13இல்  யுத்தம் காரணமாக வெளியேறியவர்களின் வதிவிடம் மற்றும் வாழ்விடத்தை உறுதி செய்யும் ஆவணங்களை பரிசீலித்து சேகரிக்கும் நடவடிக்கையில்  அக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள காணிகளில் வசித்தோர், தமது தகவல்களை, ஆணைக்குழுவில் நேரடியாக கையளிக்குமாறுஅல்லது ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு பகிரங்க அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X