2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

16 மதுபானச் சாலைகளின் விற்பனை நேரத்தைக் கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் 16 மதுபானச் சாலைகளை முற்பகல் 11 மணிக்கு திறந்து மாலை 04 மணிக்கு பூட்டுவதற்கான அறிவிப்பை மாவட்டச் செயலாளர் விடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வேண்டுகோள் விடுத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மதுபானச் சாலைகள் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணிவரை திறக்கப்பட்டுள்ளமையானது அடித்தட்டு மக்களின் பொருளாதார வீழ்ச்சிக்கும் இளைஞர்களின் குடிப்பழக்கத்துக்கும்  காரணமாக அமைகிறது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையிலுள்ள மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மதுபானச் சாலைகள் முற்பகல்; 11 மணிக்கு திறக்கப்பட வேண்டும் எனக் கோரும் தனிநபர் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்தார்.

இப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'திருகோணமலை மாவட்டத்தில் ஒவ்வொரு தரத்திலும் 44   மதுபானச் சாலைகள் காணப்படுகின்றன. இவற்றில்; 16 மதுபானச் சாலைகளின் இயங்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மதுபானச் சாலைகள் காரணமாக குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், குடும்பப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.' என்றார்.

'எனவே, 16 மதுபானச் சாலைகளின் இயங்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை குறைக்க முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .