Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 02 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கு வதற்கு ஐரோப்பிய விதித்துள்ள நிபந்னைகளில், மத விவகாரங்களை நீக்கி, இனப்பிரச்சினை தொடர்பான விடயங்கள் உள்ளடங்கலான முக்கியமான நிபந்தனைகளை மட்டும் சேர்த்து, வரிச்சலுகையை வழங்க ஆவன செய்ய வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவைக் கோரியுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை இன்று காலை 9.30 மணியளவில் திருகோணமலையில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இங்கு அரசியலமைப்பு மாற்றம், விவசாயம், மீன் பிடி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஆராயப்பட்டன.
குறிப்பாக எமது மாகாணத்தில் 45 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அம்மன்றங்களுக்கும் 45 ஆடை தொழிற்சாலை தரவேண்டும். அதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தைத் குறைக்க முடியம் என அவர்களிடம் கூறியுள்ளோம்.
ஜி.எஸ்.பி பிளஸ் தருவதற்காக பல நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம் விவாக சட்ட விடயமும் உள்ளது. அவை போன்ற மதவிவகாரங்களை நீக்கிவிட்டு இனப்பிரச்சனை தீர்வுக்கான சகல விடயங்களையும் உள்ளடக்கியதான முக்கியமான விடயங்களை நிபந்தனைகளில் சேருங்கள்.
அத்துடன், இந்த வரிச்சலுகை விரைவாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்றும் கோரியுள்ளோம்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .