2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுக்குள் அத்துமீறிய பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப்பிடிப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

 

திருகோணமலை, சூரியபுர பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (18) இரவு 11 மணியளவில் அப்பகுதியிலுள்ள வீடொன்றிக்குள் அத்துமீறி புகுந்தவேளை, அப்பிரதேசவாசிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, சூரியபுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சூரியபுர பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் விசேட குழு மேற்கொண்டு வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .