Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை நான்காம்; கட்டைப் பகுதியில் வானொன்றும் விமானப்படைக்குச் சொந்தமான பஸ்ஸும் இன்று புதன்கிழமை காலை மோதி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை வீரர்கள் இருவரும் சீனக்குடா விமானப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த வானில் பயணித்தவர்களான எல்.எச்.லஹிறு (வயது 25), ஏ.எச்.என்.பீ.சசித குமார (வயது 22) ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026