Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்ற விபத்தில், படுகாயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலைகளில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தி வந்த சாரதி, வளைவில் திருப்ப முற்பட்டபோது, முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, காயமடைந்த நான்கு பேரும் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிச் சாரதியை கைதுசெய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், அவரை எதிர்வரும் 26ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026