2025 ஜூலை 26, சனிக்கிழமை

'விளாங்குளம் கிராமத்துக்கு நிரந்தர குடிநீர்வசதி இல்லை'

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, முத்துநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் கிராமத்துக்கான நிரந்தரக் குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என, விளாங்குளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கிராமத்தில், இன்று செவ்வாயக்கிழமை (25) நடந்த பிரச்சினை வெளிப்பாட்டுக்களத்திலேயே அவர்கள், இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டினர்.

2005ஆம் ஆண்டு மீளக்குடியமர்த்தப்பட்ட இக்கிராமத்தில் 89 குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது வரட்சிக்காலம் நிலவுவதால், பிரதேச செயலகத்தினால் பவுசர் மூலம் தற்காலிகமாக நீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீர் விநியோகம், வரட்சி காலத்தில் மட்டுமே வழங்கப்படும் எனவும் பின்னர், குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில், பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பு இருந்தும் தமது கிராமத்துக்கு நீர் விநியோகம் செய்யப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X