Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் ஆராய்ச்சி தொழில்நுட்பக் கூடங்களையும் விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தையும் உருவாக்க வேண்டுமென்பதுடன், இம்மாகாணத்தில் விவசாயத்துறையையும் மேம்படுத்த வேண்டுமென அம்மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு, அம்மாகாணசபையில் புதன்கிழமை (23) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் 51 விவசாயச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள 05 தனியான திட்டங்கள், 04 கூட்டுத் திட்டங்களைக் கொண்டு மாவட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தமுடியாது. அத்துடன், விவசாய அமைச்சுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 134.5 மில்லியன் ரூபாவில் திருகோணமலை மாவட்டத்துக்கு 29.86 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
விவசாய அமைச்சினூடாக புதிய வேலைத்திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்நிலையில், விவசாயக்குளங்களை புனரமைப்பதுடன், மக்களுக்கான விவசாய அறிவையும் மேம்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
35 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
51 minute ago