2025 மே 16, வெள்ளிக்கிழமை

விவசாயச் செய்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சின்னப் புளியங்குளம், பெரிய புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றபோதே, அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து மேற்படி பகுதிகளில் விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னர், அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு விவசாயச் செய்கை தடைப்பட்டது.

இந்நிலையில், 2006ஆம் ஆண்டில் மேற்படி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து,  அப்பகுதிகளில் காணப்படும் 2 குளங்கள் 60 இலட்சம் ரூபாய் செலவில்  புனரமைக்கப்பட்டன.

எனினும், மேற்படி பகுதிகளுக்கு விவசாயிகள்  செல்வதற்கு வனபரிபாலனத் திணைக்களம்  தற்போது தடை விதித்துள்ளது. எனவே, இத்தடையை நீக்கி  மேற்படி பகுதிகளில் விவசாயச் செய்கைக்கு அனுமதிக்குமாறும் அவர் கோரினார்.

இதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பில் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .