2025 மே 20, செவ்வாய்க்கிழமை

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

Thipaan   / 2016 ஜூன் 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாவதி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில், 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்து கர்ப்பமாக்கிதாகச் சந்தேகிக்கப்படும், சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரை, கந்தளாய் தலைமைய பொலிஸின் சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இந்தச் சிறுமி வயிற்றுவலியெனத் தெரிவித்து பெற்றோருடன் கந்தளாய் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அவரை, சோதனைக்குட்படுத்திய போது, குறித்த சிறுமி 2 மாத கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சிறுமி, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X