2025 மே 20, செவ்வாய்க்கிழமை

08 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி

Princiya Dixci   / 2016 ஜூன் 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பகுதியைச் சேர்ந்த 08 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த அச்சிறுமியில் அயல்வீட்டுக்காரரான 41 வயதுடைய நபரை, பொதுமக்கள் நையடைப்புச் செய்து மூதூர் பொலிஸில் ஒப்படைத்தச் சம்பவம், நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோரிடம், இரால்குழி களப்பு கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சிறுமியை உதவிக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து அழைத்துச் சென்று, கடற்கரை ஓரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

குறித்த காட்டுப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற சிலர், இதனை அவதானித்து சிறுமியை மீட்டதோடு குறித்த நபரை நையடைப்புச் செய்து மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியை, இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மூதூர் வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லையென அறிக்கை கிடைத்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X