Princiya Dixci / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, அண்ணல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் சற்று முன்னர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமது பர்ஷாத் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சிறுவன், மீன் வாங்குவதற்கு தாயிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது நண்பனுடன் கிண்ணியா கட்டையாற்று பாலத்தடிக்குச் சென்றுள்ளார்.
மீன் வாங்குவதை விடுத்து, கட்டையாற்றில் இருவரும் குளித்துள்ளனர். அந்த நேரத்தில் பலமான நீரோட்டம் இருந்ததால் குறித்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.
பிரதேசவாசிகள் உடனடியாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு சிறுவனை வெளியில் எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனளிக்கவில்லை.
சடலம், தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026