2025 மே 10, சனிக்கிழமை

10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)
சீரற்ற கால நிலைக் காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்செய்கையானது வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழை ஓய்ந்துள்ள நிலையில் வயல் நிலங்களில் இருந்து நீர் வடிந்துவருகின்ற போதும் ஒரு வாரத்திற்கு மேலாக நெற்கதிர்கள் அதன் ஆரம்பப் பருவத்தில் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.

கடந்த சில ஆண்டுகளாக வெள்ளம் அல்லது வறட்சியினால் இப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான   விவசாயிகள்  பெரும் மீண்டும்; பெரும் நஷ்டத்தினை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் மழை, வெள்ளம் காரணமாக மீண்டும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X