Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறு மீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்பதுடன், அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025