2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

13 வயதுச் சிறுமியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மூதூர் நாவலடி பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலடி மூன்றாம் பிரிவு இறால்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் நாடு திரும்பியுள்ளதாக் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .