2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'13ஐ திருத்துவதற்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் த.தே.கூ பிரேரணை சமர்ப்பிக்கும்'

Menaka Mookandi   / 2013 ஜூலை 14 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி கூடும்போது 13ஆவது அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் (சபை அமர்வு) கூடி இது குறித்து முடிவெடுப்பார்கள் என்று மாகாண சபையின் எதிர்க் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை குழுவின் தலைவருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மேலும், 13ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக கொண்டு வர இருக்கும் பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வாக்களிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளது. இதுகுறித்த பிரேரணையை விரைவில் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது சிறுபான்மையினரின் நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ளதைக் கருத்திற் கொண்டு மு.கா. இப்பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள அதியுயர்பீடக் கூட்டத்தின்போது இது குறித்து, இறுதித் தீர்மானம் எட்டப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

மு.கா.வைக் கொண்டு 13ஆவது திருத்தத்துக்கு எதிரான பிரேரணையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுமென்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. ஆகிய கட்சிகள் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .