2025 மே 10, சனிக்கிழமை

17,000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


தம்பலகாமம் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 17,000  ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக வட்டமடு விவசாய சங்கத்தின் தலைவர் ஏ.முகமட் இபுனு தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் மழை வெள்ளம், கந்தளாய் குளம் உள்ளிட்ட குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலும் ;இந்நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் இந்த விவசாயிகளுக்கு அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நிவாரண உதவிகளையும், நஷ்டஈட்டுத் தொகையினையும் வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X