Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், பெரும் போக நெற் பயிர்ச்செய்கையில், இவ்வருடம் 186,663 ஹெக்டேயர் வயல் நிலங்களில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 201ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில் 78,273 ஹெக்டேயரிலும், மட்டக்களப்பில் 67,855 ஹெக்டேயரிலும், திருகோணமலையில் 39,735 ஹெக்டேயரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றில், 60 சதவீதமான நெல் வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் மூன்று வாரத்துக்குகுள் அறுவடை பூர்த்தியடையவுள்ளதாகவும் லாம் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், கடந்த வருடஇறுதியில் நிலவிய வரட்சி மற்றும் பசளை பற்றாக்குறை போன்ற காரணங்களால் இப்பெரும் போக பயிர்ச்செய்கையில், 28 சதவீதமாக நெல் உற்பத்தி குறைவடையலாம் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை, உற்பத்தி செய்யப்டும் நெல்லை சந்தைப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago