2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

193 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கிழக்கு மாகாண  பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்காக 193 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் செயலகத்தில்  நடைபெற்றது.

நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளை புதன்கிழமை பாடசாலைகளில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
 
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கே இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X