2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மணியரசன்குளம் பகுதியில் உயிரிழந்த யானை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, மணியரசன்குளம் (குரங்கு பாஞ்சான்) பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வயது மதிக்கத்தக்க இந்த யானைக்கு நஞ்சூட்டப்பட்டதால் அது இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் தெரிவித்த தகவலை அடுத்து, வனவிலங்கு திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், குறித்த பகுதிக்குச் சென்று இறந்த யானையின் உடலத்தை கைப்பற்றினர்.

கடந்த சில நாட்களாக கந்தளாய், ஜயந்திபுரம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பல பயிர்கள் நாசமாகியதாக பிரதேச வாசிகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .