Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
மழைக்காலம் வருவதற்கு முன்னர் அனைத்து மக்களையும் குடியமர்த்தி சகல வசதிகளையும் ஏற்படுத்தித் த்ருவேன் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
திருமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கடற்கரைச்சேனை, கூனித்தீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான கலந்துரையாடலில் பிரதியமைச்சர் முரளிதரன் இன்று புதன்கிழமை காலை பங்குபற்றினார்.
அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து உரையாடிய அமைச்சர், மக்களிடமே அவர்களுக்கான இடங்களை தெரிவு செய்து தருமாறு கேட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார்.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், பட்டித்திடல், மணல்சேனை, கட்டைபறிச்சான், கிளிவெட்டி ஆகிய இடங்களிலுள்ள முகாம்களுள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கலந்துரையாடலில், மூதூர் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனிபா, மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன், கிளிவெட்டி முகாம் பொறுப்பாளரும் கிராம சேவையாளருமான செல்வரட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago