2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஆசிரியர் பயிற்சி பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு  ஆசிரியர் பயிற்சியை நாடளாவிய ரீதியில் 42 நிலையங்களில் வழங்கி வருகின்றது. இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் இப்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சியின் முதலாம் ஆண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பயிற்சி நிலையத்தில்  பயிற்சியை மேற்கொள்ளும் சகல ஆசிரியர்களும் எதிர்வரும் சனிக்கிழமை கற்கை நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

குறித்த தினத்தில் சமூகமளிக்காத ஆசிரியர்கள் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை தோன்றலாம் என பயிற்சி இணைப்பாளர் எஸ்.தேவசகாயம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .