2025 மே 15, வியாழக்கிழமை

மூதூரில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு கடன்வழங்கும் திட்டம் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடன் வழங்கும் முதலாவது வேலைத்திட்டம் இன்று மூதூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இத்திட்டத்தில் முதலாவது கட்டமாக கடன் கோரி விண்ணப்பம் செய்தவர்களில் இருந்து 359 பேருக்கு தொழில் துறையை மேம்படுத்தவும் மற்றும் வீடமைப்புக்குமான கடன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் என்.செல்வநாயகம் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயளாலர் திசாநாயக்க, புனர்வாழ்வு அதிகாரசபை தவிசாளர் ஈ.ஏ.சமரசிங்க, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீ.கே.ஜினதாச, மூதூர் பிரதேச சபை தவிசாளர் கே.எம்.தௌபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .