Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், பரீட்)
கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை மாபெரும் அறிவியல் கண்காட்சியொன்றை கிண்ணியாவில் நடத்தவுள்ளது.
கிண்ணியா மத்திய கல்லூரி, அல் அக.ஸா கல்லூரி, அல்_ஹ-ரா பெண்கள் கல்லூரி, அப்துல் மஜீத் வித்தியாலயம் என்பனவற்றில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 15 கல்வி வலயங்களில் உள்ள 383,326 மாணவர்களும், 5000 ஆசிரியர்களும் பயன் பெறத்தக்க விதமாக இது ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இதில் 442 தமிழ் பாடசாலைகள், 309 முஸ்லிம் பாடசாலைகள், 244 சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெற உள்ளனர்.
இது பற்றி விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையில் பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
2 hours ago