Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 2 நகரசபைகள், 11 பிரதேசசபைகள் என்பனவற்றின் நிர்வாகத்தின் கீழ் வரும் வீதிகளுக்கான வீதி விளக்குகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பொருத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபையின் கிழக்கு பிராந்திய அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மின்சார விநியோகம் பற்றிய பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கூட்டம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம், வீடமைப்பு, கிராமிய மின்சாரத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அமைச்சு கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்த்திலேயே வீதி விளக்குகள் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், நகரசபை தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். கிழக்கு பிராந்திய மின்சாரசபை பொது முகாமையாளர் து.தவனேஸ்வரன், கிழக்கு மாகாண கால்நடை விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தின் மின்சார விநியோகம் சம்பந்தமாக இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. வீதிகளில் மின் விளக்கு இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதேசசபைகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு பதிலளித்த பிரதி பொதுமுகாமையாளர் மின்சாரசபையிடம் இவற்றுக்கு வேண்டிய பணம் இல்லை. எமது ஒதுக்கீடுகளுக்கு அமைய நாம் இவற்றினைப் பொருத்தி வருகின்றோம். நிதி கிடைக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும் என்றார். இவ்விடயத்தில் அமைச்சர் உதுமாலெப்பை பிரதேச சபைகளின் தலைவர்களிடம் நீங்கள் எதாவது நிதி ஒதுக்கீடு செய்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றார்.
திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா நகராட்சிமன்ற நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார். இதனையடுத்து, ஏனைய சபகைளின் தலைவர்களும்; 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதி பொதுமுகாமையாளர்,; வீதி விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்மென்பதுடன், ஜனவரி மாதம் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025