2025 மே 15, வியாழக்கிழமை

மூதூர் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி,  இன்று வெள்ளிக்கிழமை மூதூர் பிரதேச செயலாளர் என். செல்வநாயகத்தை மூதூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேரில் சந்தித்து பேசியுள்ளது.

இதன்போது மகஜரொன்றும் மூதூர் பிரதேச செயலாளரிடம், மூதூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்திலுள்ள 27 பள்ளிவாசல்களின் நிர்வாக உயர்பீடமாக விளங்கும் மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எம்.ஏ ஆப்தீன், அதன் தலைவர் வீ.எம்.காலிதீன் ஆகியோர் கையெழுத்திட்டு வழங்கியுள்ள அம்மகஜரில், மூதூர் பிரதேசத்தில் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உடனடி உணவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவன செய்யுமாறு அல்லலுறும் மக்களின் சார்பாக உருக்கமான வேண்டுதலென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் மீன்பிடி, விவசாயம் உட்பட அனைத்து தொழிற்றுறைகளும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தாழ்நிலக் குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளன. மீன்பிடி மற்றும் கூலித்தொழில் மூலம் அன்றாட ஜீவனோபாயத்தை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் பல நாட்களாக உண்பதற்கு உணவற்ற நிலையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .