Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
மூதூர் - திருகோணமலை கடல்வழி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த கப்பலும் பயணிகள் படகும் சேவைகளை நிறுத்தியுள்ளதால்,; பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மூதூரிலிருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து மூதூருக்கும் கடல் மார்க்கமாக போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த 'சேருவில-ஐஐ' என்னும் பெயருடைய கப்பல் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு இயந்திரக்கோளாறு காரணமாக தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது. பின்னர் 'மாதுமை' என்னும் பயணிகள் படகு மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்தது. தற்போது அப்படகும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேவையை நிறுத்தியுள்ளது. இதனால், மூதூரிலிருந்து கடல் மார்க்கமாகச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கடல் வழியாக சுமார் 11கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்திற்குள் கடந்து செல்லும் பயணிகள், தற்போது கந்தளாய் ஊடாகச் செல்லும் தரைவழிப் பாதையில் சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக பயணித்து திருகோணமலையைச் சென்றடைகின்றனர்.
இதேவேளை, கடற்படையினர் தமது அலுவலகர்கள் பயணிப்பதற்கு விசைப்படகு சேவையை தொடராக நடத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago