2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண கல்வி, காணி. போக்குவரத்து அமைச்சின் செயலாளராக என்.ஏ.புஸ்பகுமார் நியமனம்

Super User   / 2011 ஜனவரி 02 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு  மாகாண கல்வி, காணி. போக்குவரத்து அமைச்சின் செயலாளராக என்.ஏ.புஸ்பகுமார இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

கடந்த வருடம் இறுதிப்பகுதியில் குறித்த பதவிக்கு  பொலநறுவை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டிதரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் கடமைகளை பொறுப்பேற்காத காரணத்தால்  கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய புஸ்பகுமார கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநரின் செயலாளராக கடமையாற்றும் ஏ.எச்.உடஹே கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் பதில் செயலாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X