2025 மே 15, வியாழக்கிழமை

ரொட்டவௌயில் கடத்தப்பட்ட கால்நடைகள் மீட்பு

A.P.Mathan   / 2011 ஜனவரி 05 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போன கால்நடைகளை நேற்று இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பகுதியில் கால்நடைகள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மொறவௌ பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்கள் நேற்று காலை முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே மூன்று நாட்களாக காணாமல்போன கால்நடைகளை, வழமையாக மேய்ச்சலுக்கு செல்கின்ற மகதிவுல்வௌ குளத்துப்பகுதிக்கு தேடிச்செல்லும் வேளையில் திருடர்களால் கட்டி வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை உரிமையாளர்கள் அவதானித்ததைத் தொடர்ந்து பொலிஸாரிற்கு தெரிவித்தனர். உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்த பொலிஸார் கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மகதிவுல்வௌ காட்டு வழியூடாக கந்தளாய் பகுதிக்கு கால்நடைகள் கடத்தப்படுவதாகவும் தொடர்ச்சியாக கால்நடைகள் களவாடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திருட்டு தொடர்பாக தகவல் தருபவருக்கு கால்நடை உரிமையாளர்கள் சன்மானம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .