2025 மே 15, வியாழக்கிழமை

அரச நிவாரணமின்றி தவிக்கும் மூதூர் மக்கள்

Super User   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளற்ற அவல நிலையில் உள்ளது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டீ. சில்வாவோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மூதூர் பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் மந்த கதியில் கிடைப்பது சம்பந்தமாக அமைச்சர் பௌஸி மாவட்ட அரசாங்க அதிபரை கடுமையாக சாடியபோது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமைத்த உணவுகள் சீராக வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் சிரேஷ்ட அமைச்சரிடம் கூறியுள்ளார்.

எனினும்இ மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் அனேகர் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கபடும் சமைத்த உணவுகள் கிடைக்க வில்லை என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்படும் சில உணவுப் பொதிகளேயே தாம் கண்டதாகவும் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .