2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லை: மாகாண சுகாதார அமைச்சர்

Super User   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் கிடையாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ் சுபைர் தெரிவித்தார்.

கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக தொற்று நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளன என்றார் அவர்.

அதனால் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு சகல நடவடிக்கையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதுடன் நடமாடும் சுகாதார சேவை, இலவச மருத்துவ முகாம் என பல நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருவதாக மாகாண அமைச்சர் சுபைர் மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .