2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தலைமையிலான குழு மூதூருக்கு விஜயம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில், இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பகுதி மக்களை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தலைமையிலான குழு நேற்று வியாழக்கிழமை முதூரிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.
 
இதன்போது கிழக்கு  மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ், மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்கடர். தேவராஜ், சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் ஜே.எம். ஹூசைதீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இவர்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று மக்களின் நிலைமையை நேரில் கேட்டறிந்ததோடு, மூதூர் தளவைத்தியசாலைக்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் சென்று பார்வை இட்டனர்.

இதன்போது, மூதூர் தளவைத்தியசாலையில் இயங்காதிருக்கும் சத்திர சிகிச்சைப் பிரிவை இயங்கச் செய்வதற்கும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான உபகரணங்ளை வழங்குவதற்கான நடவடிக்கையை தான் எடுப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .