2025 மே 14, புதன்கிழமை

தங்கல்லை மீனவரின் சடலம் திருமலையில் மீட்பு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
பிரதீப் குமார (37) என்னும் இறந்த நபர்- துறுசெவன, பாதகம தகுண, பெலிவத்த, கோட்டகொட பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தை என வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து வந்த மீனவ நண்பர்கள் தெரிவித்தனர்.
 
கடந்த 08ஆம் திகதி தங்கல்ல பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட பிரதீப் குமாரவே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
இவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தானியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .