2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோமரங்கடவல கிராமிய வைத்தியசாலை திறந்து வைப்பு

Super User   / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை கோமரங்கடவல கிராமிய வைத்தியசாலையை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கட்டப்பட்ட இவ்வைத்தியசாலையை சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் அழைப்பின்பேரில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஐயவிக்ரம, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் எம்.தேவராஐன், பிரதி சுகாதார பணிப்பாளர் திருமதி ஞானகுனாளன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.தௌபீக் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .