Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 02 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருமலை பொது சந்தையில் வைத்து வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகளுக்கு எதிராக திருமலை நகரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சந்தையில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடவேண்டாம் என கடந்த 2 தினங்களாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி சிலர் இன்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களது பொருட்களை அதிகாரிகள் நகர சபைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
திருகோணமலை மத்திய சந்தையில் 215 கடைகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 185 கடைகளைப் பெற்றவர்களில் அநேகர் நகரசபைக்கு செலுத்த வேண்டிய தவணைப்பணத்தை செலுத்தாது இருக்கின்றனர். இவ்வாறு இவர்களிடம் 90 இலட்சம் ரூபாய் நிலுவையாக பெறப்பட உள்ளது. அங்காடி வியாபாரிகள் முறையற்ற விதமாக வியாபாரத்தில் ஈடுபடுவதால் தமக்கு வருமானம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அங்காடி வியாபாரிகளுக்கு எதிராக நகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago