2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வீதிக்கு தார் போடுமாறு வலியுறுத்தி மறியல் போராட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
 
தம்பலகாமம், கிண்ணியா வீதிக்கு தார் போடுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக  காலை 6.30 மணிக்கு முள்ளியடியிலிருந்து திருகோணமலைக்கான பஸ் போக்குவரத்து தடைப்பட்டதுடன், கிண்ணியக்வூடான  தூர இடங்களுக்கான பஸ் சேவையும்  தடைப்பட்டது.  இந்த நிலையில், தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் கிண்ணியா கூருன்கல் என்னும் இடத்தில் திருப்பிவிடப்பட்டு வான்ஆறு வீதியூடாக பயணித்தது.  

இதனால் கிண்ணியாவிலிருந்து தம்பலகாம் வீதியூடாக  வெளியிடங்களுக்கு செல்வோர் பல்வேறு  அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X