2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 28 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது பாடசாலையை  தரம் உயர்த்துமாறு வலியுறுத்தி பகிஷ்கரிப்பொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

தமது பாடசாலையில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதுடன்,  இப்பாடசாலை தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு  கல்வி திணைக்களத்திற்கு  சிபாரிசு செய்தபோதிலும், கல்வித் திணைக்களம் அப்பாடசாலையை  தரம் உயர்த்துவதற்கான  நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X