2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பலி

Menaka Mookandi   / 2011 ஜூலை 11 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை, கடற்படை முகாமில் கடமையிலிருந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடமை நிமித்தம் குறித்த வீரரால் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததிலேயே இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இருப்பினும் இவரது மரணம் தற்கொலையா? அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மரணம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று திருகோணமலை, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவரும் திருகோணமலை, திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்தவருமான திலங்க தர்ஷன (வயது 21) என்ற கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடமையின் நிமித்தம் கடற்படைக் காவலரண் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை, துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .