Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை நகரில் மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகள் பயன்படுத்துவதற்காக பயிற்சி நிலையம் ஒன்றை திறந்துள்ளது. இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இம்மண்டபத்தில் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூராட்சிசபைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக இம்மண்டபத்தை தங்களின் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஏனைய நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம் என்றும் மாகாண உள்ளூராட்சித்திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உதயகுமார், திருகோணமலை பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கே.குணநாதன் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago